கத்திக்குத்தில் முடிந்த காவல் துறை கான்ஸ்டபிள்களின் தகராறு!
Ad Space
Ad Space
களுத்துறை பொலிஸ் வித்தியாலயத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பொலிஸ் வித்தியாலயத்தில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் போது இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space