கனடாவிடமிருந்து எரிவாயு வாங்குவது தொடர்பில் ஜேர்மனியும் கனடாவும் நேற்று ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. ஜேர்மனி, ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்கிவந்த நிலையில், உக்ரைன் போரைத் தொடர்ந்து ஜேர்மனிக்கு எரிவாயு வழங்குவதை நிறுத்தியது ரஷ்யா.
ஆகவே, எரிவாயுவுக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, வேறு பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துவருகிறது ஜேர்மனி.
அதே நேரத்தில், ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் உருவாக்கியுள்ள அச்சுறுத்தல் காரணமாக, தனது பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக, தனது எரிவாயு ஏற்றுமதியை விஸ்தாரமாக்கும் நடவடிக்கைகளில் கனடா ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில், கனடாவின் Ksi Lisims என்னும் எரிவாயு ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து, ஜேர்மனியின் எரிசக்தி நிறுவனமான SEFE, ஆண்டொன்றிற்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் திரவ இயற்கை எரிவாயு வாங்கும் வகையில் இருநாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று நேற்று கையெழுத்தாகியுள்ளது.
ஆக, இந்த ஒப்பந்தம் ஜேர்மனி மற்றும் கனடா என இருதரப்புக்கும் லாபம் தரும் ஒரு ஒப்பந்தமாக அமைந்துள்ளது.
கனடாவிடம் எரிவாயு வாங்கும் ஜேர்மனி: ஒப்பந்தம் கையெழுத்தானது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space