பாதாள உலகக் கும்பலின் தலைவர் 'கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் கம்பஹா ஒஸ்மண்ட் என்பவருக்கு 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் உத்தரவு பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை (13) இரவு கம்பஹா, ஸ்ரீ போதி வீதி பகுதியில் வைத்து 'கம்பஹா ஒஸ்மண்ட்' கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கணேமுல்ல சஞ்சீவ என்பவரைத் திட்டமிட்டு கொலை செய்ய முயன்றமைக்கு உடந்தையாக இருந்து துப்பாக்கிகளை வழங்கியமை மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியமை விசாரணையில் தெரியவந்ததையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கம்பஹா ஒஸ்மண்ட்டுக்கு 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space