கரையோரப்பகுதிகளில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்
Ad Space
Ad Space
கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி கேரளா கடற்பரப்பில் மூழ்கிய 'எல்சா 3' கப்பலிலிருந்து கசிந்த பிளாஸ்டிக் துகள்கள் நாட்டின் பல கரையோரப்பகுதிகளில் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்த பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகள் தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த பிளாஸ்டிக் துகள்கள் யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து கடலலையோடு அடித்து வரப்பட்டுள்ளன. அத்துடன் மன்னார், கல்பட்டி, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு மற்றும் கொழும்பு முதல் காலி வரையிலான கடற்கரைப்பகுதிகளிலும் இவை படிந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் தற்போது துப்புரவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
உள்ளூர் மீனவர்களுக்கு தினசரி ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள் இந்தச் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அண்மையில் உச்சிமுனை தீவிலும் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மீனவர்களுக்கு நாளாந்த ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள் இந்தச் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சமந்த குணசேகர மற்றும் பொது மேலாளர் ஜகத் குணசேகர ஆகியோர், கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
அங்கு நடைபெற்று வரும் பணிகளை மேற்பார்வையிட்ட அவர்கள், பாதிப்பின் தீவிரத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வுகளையும் முன்னெடுத்துள்ளனர்.
Ad Space
Ad Space