களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!
Ad Space
Ad Space
கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை (04) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
காணாமல் போனவர் வத்தளை - மாபோல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மாணவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தடயவியல் விஞ்ஞான பீடத்தில் பயின்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கல்விச் சார் நடவடிக்கை ஒன்றிற்காக ஏனைய மாணவர்களுடன் இணைந்து கடந்த இரண்டு மாதங்களாக குறித்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரின் உதவியுடன் கொஸ்கம பொலிஸார் இணைந்து, காணாமல் போன மாணவரை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space