மட்டக்களப்பு, களுமுந்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச் சடங்கு உற்சவத்தை முன்னிட்டு பால்குட பவனியும் பாலாபிஷேகமும் செவ்வாய்கிழமை (23) சிறப்பாக நடைபெற்றது.
அக்கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வரர் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பக்த அடியார்களினால் நடைபவனியாக பால்குடம் எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச் சடங்கு இன்றைய தினம் சிவ ஸ்ரீ த.கு.திருச்செல்வம் குருக்கள் தலைமையில் ஆரம்பமாகின்றன.
கும்பம் வைத்தலுடன் ஆரம்பகும் இச்சடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை தீமிதிப்பு இடம் பெற்று அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பிளாந்துறை வாவியில் கும்பம்சொரிதலுடன் அம்பாளின் திருச் சடங்கு நிறைவு பெறவுள்ளது.
களுமுந்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாலாபிசேகம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space