களு கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் - நீர்பாசனத் திணைக்களம்
Ad Space
Ad Space
களு கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் சிறு வெள்ளப்பெருக்கு நிலைமையொன்று ஏற்படக்கூடும்.
அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகலை, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம், எலபாத்த ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.
இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், இப்பகுதிகளின் ஊடாகப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மற்றும் பயணிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Ad Space
Ad Space