இந்தியா அமெரிக்கா இடையே போடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும். இதனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
ஏற்கெனவே ஜவுளித் தொழில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவையே அமெரிக்காவிடம் மத்திய அரசு சரணடையச் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் இந்தியா பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.
காங்கிரஸ் தலைமை எடுப்பதே இறுதி முடிவு: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.சி.வேணுகோபால்
Ad Space
Ad Space
ஆட்சியில் பங்கு குறித்து கட்சியில் இருக்கும் தனிநபர்கள் யாராவது கருத்துச் சொன்னால், அது அவர்களின் சொந்தக் கருத்துகளே தவிர, அதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் சென்னை முகப்பேரில் பாதயாத்திரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கே.சி.வேணுகோபால், செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.
Ad Space
Ad Space