காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!
Ad Space
Ad Space
அம்பாறை - பானம பகுதியிலுள்ள பானம ஏரிக்கு அருகில், காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யானை தாக்குதலுக்குள்ளான குறித்த நபர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பானம தெற்கு பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய வயோதிபர் என தெரியவந்துள்ளது.
குறித்த வயோதிபர் பனம ஏரிக்கு நீராடுவதற்காக சென்று, திரும்பியபோது காட்டு யானை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பானம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space