வடக்கு, கிழக்கு பகுதிகளில் அரசினால் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (22) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது பலர் பௌத்தமயமாக்கலை கண்டிப்பதோடு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் தீர்வும் இதுவரை கிடைக்காததை வலியுறுத்தி, பதாதைகளை ஏந்தியவாறும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space