கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி
Ad Space
Ad Space
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், மக்கள் கார் பயணத்தைத் தவிர்த்தால் அவர்களுக்கு 500 சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுப்பதாக அமைப்பொன்று அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், மக்கள் தங்கள் சொந்த காரில் பயணிப்பதை தவிர்த்துவிட்டு, பேருந்து அல்லது சைக்கிளில் பயணித்தால், அல்லது பலர் சேர்ந்து ஒரே காரில் பயணித்தால், மாதம் ஒன்றிற்கு 500 சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுப்பதாக Modus Foundation என்னும் அமைப்பு அறிவித்துள்ளது.
மக்களுடைய பயண வழக்கங்களை மாற்றுவதற்காகவும், ஆய்வுகளுக்காக தரவுகள் சேகரிப்பதற்காகவும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த திட்டத்தில் ஜெனீவாவிலுள்ள 72 குடும்பங்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு முழு ஜெனீவா மாகாணம் மட்டுமின்றி, அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space