காலி, தங்கேதர பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய, சந்தேக நபர்கள் இருவர் காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி காலை தங்கேதர, டிக்சன் சந்தி பகுதியில் காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால் 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த நபர் வட்டிக்கு பணம் வழங்குபவர் என தெரிவிக்கப்படுகிறது.
பண கொடுக்கல் - வாங்கல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இக்கொலை தொடர்பான விசாரணைகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையிலேயே இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலி துப்பாக்கிச் சூடு சம்பவம் : இருவர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space