கால்வாயில் கவிழ்ந்து உழவு இயந்திரம் விபத்து ; நூலிழையில் உயிர்தப்பிய சாரதி!
Ad Space
Ad Space
பொலன்னறுவையில் மாதுறு ஓயா ZD கால்வாயில் கவிழ்ந்து உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெதகமவிலிருந்து வெஹெரகம நோக்கிப் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று வீதியில் பயணித்த லொறி ஒன்று செல்வதற்கு வழிவிடும் போது கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது உழவு இயந்திரத்தின் சாரதி உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Ad Space
Ad Space