கிரிந்திவெல பகுதியில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு
Ad Space
Ad Space
கம்பஹா - கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிஸ்வெல்ல பகுதியில் நேற்று புதன்கிழமை (18) மாலை வீடொன்றில், மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய மூதாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மூதாட்டியின் கழுத்தில் துணி ஒன்று சுற்றப்பட்டிருந்ததுடன், அவரது காதுப் பகுதியில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில், குறித்த மூதாட்டி உயிரிழந்துள்ளமையால், இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 61 வயதுடைய நபரொருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். எனினும், இந்தக் கொலைக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space