இந்நிலையில் கிரீன்லாந்தை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைப்பது தொடர்பான மசோதாவை அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி.யான ராண்டி பைன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதனிடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசன், கிரீன்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் மோட்ஸ்பெல்ட்டை சந்தித்து் கிரீன்லாந்து விவகாரம் பற்றி பேசவுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கூறும்போது, ‘‘அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கிரீன்லாந்து இருப்பதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதே சிறந்தது’’ என்றார்.