கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் கப் ரக வாகனம் மீது துப்பாக்கிச்சூடு!
Ad Space
Ad Space
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (13) அதிகாலை 2 மணியளவில் பொலிஸாரின் சைகையை மீறி பயணித்த கப் ரக வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தரும்புரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சட்டவிரோத மணல் கொண்டு சென்ற கப் வாகனத்தை மறித்து சோதனையிட முற்பட்ட சமயம் பொலிஸாரின் சைகையை மீறி குறித்த வாகனம் பயணித்துள்ளது.
இதனையடுத்து குறித்த வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில், வாகனத்தைச் செலுத்தி சென்ற சந்தேகநபர் வாகனத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் ஏற்கனவே குறித்த பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற சமயம் பொலிஸாரால் ஏற்கனவே நான்கு மேற்பட்ட துப்பாக்கி சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space