இதன்போது முன்வைக்கப்பட்ட குற்றங்கள், அனுமதிக்கப்பட்ட நேர அட்டவணைக்கு ஏற்பச் சேவையில் ஈடுபடாமை. அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விடப் பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டமை. வழித்தட அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பாதையைத் தவிர்த்து வேறு பாதையில் சேவையில் ஈடுபட்டமை. பேருந்தில் பயணித்த பயணிகளுடன் முரண்படும் வகையில் தகாத முறையில் நடந்துகொண்டமை.
மேற்குறிப்பிட்ட குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, உரிய தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தினத்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனருக்கு 7 நாட்களுக்குப் பணித்தடையும் (வேலை நிறுத்தம்) விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் 01.07.2026 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்தப் பேருந்துக்கான கடுமையான நிபந்தனைகளுடனான புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி - வவுனியா வழித்தடப் பேருந்தில் நடந்த முறைகேடு!
Ad Space
Ad Space
சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளான கிளிநொச்சி - வவுனியா வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த பேருந்து சேவைகள் தொடர்பிலும், பயணிகளுடனான தகாத நடத்தைகள் தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதிகார சபை இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த பேருந்துக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30.06.2026 அன்று குறித்த பேருந்தின் சேவையின்போது பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.