குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசிய கணவன் ; மனைவி பலி!
Ad Space
Ad Space
அநுராதபுரம், பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் கணவன் வீட்டின் மீது பெற்ரோல் குண்டு வீசியதில் மனைவி தீக்கிரையாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மனைவி ஆவார்.
கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கணவன் வீட்டின் மீது பெற்ரோல் குண்டு வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வீட்டினுள் இருந்த மனைவி தீக்கிரையாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரான கணவன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பரசன்கஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space