வலப்பனை, வெவகெலே குளத்தில் மூழ்கி நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் வியாழக்கிழமை (05) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல்போனவர் கும்பல்கமுவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஆவார்.

குறித்த நபர் டயர், டியூப்  உதவியுடன் குளத்தில் மீன்பிடிக்கச் சென்றபோதே நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், காணாமல்போன நபரைக் கண்டறிவதற்கான தேடுதல் நடவடிக்கைகளையும் மேலதிக விசாரணைகளையும் வலப்பனை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.