குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு - 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி
Ad Space
Ad Space
நுவரெலியா - தலவாக்கலை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் இரத்தினகிரி தோட்டத்தில், குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(31.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமஸ்டன் இரத்தினகிரி தோட்டத்தில் வழமையான பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது திடீரென குளவிகள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக லிந்துலை பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், லிந்துலை லிப்பகளை தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 70 வயதுடைய முத்து நாராயணசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குளவி கொட்டுக்கு இலக்கான ஏனைய தொழிலாளர்களில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும், இருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் லிந்துலை பிராந்திய வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space