கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு
Ad Space
Ad Space
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள முனைக்காடு பொது மயானத்தில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு நேற்று வியாழக்கிழமை (2) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மயானத்திற்கு நேற்று சென்றிருந்த நபர் ஒருவர் அங்கு கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதையடுத்து அங்கு சென்ற பொலிஸார், விசாரணைகளை நடத்தி குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்தனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று வெள்ளிக்கிழமை (3) கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Ad Space
Ad Space