கொலை செய்யப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு!
Ad Space
Ad Space
மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியில், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டி ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றினுள் சடலம் ஒன்று காணப்படுவதாக மொரட்டுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
விசாரணைகளின் போது, உயிரிழந்தவர் மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மொரட்டுவை பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space