“புகையிலையிலிருந்து விடுதலையான தலைமுறை” என்ற உத்தேச கொள்கையை சட்டமாக்குமாறு கோரி, 300க்கும் மேற்பட்ட பெண்களும் தாய்மார்களும் இன்று (25) வெள்ளிக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
புகையிலைப் பயன்பாட்டிலிருந்து எதிர்கால தலைமுறையைப் பாதுகாக்கும் நோக்கில், “புகையிலையிலிருந்து விடுதலையான தலைமுறை” என்ற உத்தேச கொள்கையை சட்டமாக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




