கொழும்பு- மடம்பிட்டிய,கொட்டாஞ்சேனை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடம்பிட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவரிடமிருந்து 520 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண், கொழும்பு 13-ஐச் சேர்ந்த 31 வயதுப் பெண் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பாக மடம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.