கொழும்பில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு
Ad Space
Ad Space
கொழும்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடலோர ரயில் மார்க்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.
மருதானையிலிருந்து காலி நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space