கொழும்பு - அஹமதாபாத் இடையே நேரடி விமான சேவை
Ad Space
Ad Space
கொழும்புக்கும் இந்தியாவின் அஹமதாபாத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாக கொழும்புக்கும் அஹமதாபாத்திற்கும் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
“இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் குஜராத்தின் அஹமதாபாத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடாக கொழும்புக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நாங்கள் எதிர்ப்பார்த்துள்ளோம். இதன் மூலம், இலங்கையில் உள்ள யாத்திரீகர்கள் குஜராத்துக்குச் சென்று புனிதத் தலங்களை தரிசிப்பதற்கான சிறந்த வாய்ப்பு உருவாகும்.” என பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Ad Space
Ad Space