கொழும்பு மெரின் டிரைவ் கடற்கரையில் சடலம் மீட்பு!
Ad Space
Ad Space
கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள மெரின் டிரைவ் கடற்கரையில் இன்று திங்கட்கிழமை (05) காலை மிதந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், உயிரிழந்தவர் ஆணா அல்லது பெண்ணா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான விசாரணைகள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space