ஈரான் போர் உருவாக்கியுள்ள எரிபொருள் பிரச்சினையால் சில ஐரோப்பிய நாடுகள் கோடை விடுமுறை காலத்தில் விமான சேவைகளை ரத்து செய்யலாம் என்றும், சுற்றுலா செல்லும் எண்ணத்திலிருக்கும் மக்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

பிரான்ஸ் அமைச்சர் அறிவிப்பு

ஆனால், பிரான்சில் அப்படி கோடை விடுமுறையின்போது பெரிய அளவில் விமான சேவைகள் ரத்து செய்யப்படாது என பிரான்ஸ் போக்குவரத்துத் துறை அமைச்சரான Philippe Tabarot தெரிவித்துள்ளார். கோடை விடுமுறையின்போது விமான சேவைகள் ரத்து செய்யப்படுமா? பிரான்ஸ் அமைச்சர் அறிவிப்பு | France Says No Mass Flight Cancels In Summer எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதால் சில விமான நிறுவனங்களுக்கு கவலை ஏற்பட்டுள்ள நிலையிலும், கோடை விடுமுறையின்போது பெரிய அளவில் விமான சேவைகள் ரத்து செய்யப்படாது என Philippe தெரிவித்துள்ளார்.
பிஸியான கோடைக்காலம் என்பது விமான நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் வருவாயை ஈட்டித்தரும் காலகட்டம் என்பதால், மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போரால் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டிருந்தாலும் கூட விமான சேவைகள் ரத்து செய்யப்படாது என்று கூறியுள்ளார் Philippe.   கோடையின்போது, பிரான்ஸ் நாட்டு மக்கள் தாங்கள் எந்த நாட்டுக்குப் போக விரும்பினாலும் போகலாம் என்றும், உலகில் எந்த நாட்டவர்களாக இருந்தாலும் பிரான்சுக்கு சுற்றுலா வரலாம் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் Philippe.