கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம்
vidiyel 6 மாசி 2026 · 15:25 2 views
Ad Space
Ad Space
கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் காலங்களிலும், அதன் பின்னர் ஜனாதிபதியான பின்னரும் யாழ்ப்பாணம் வந்து சென்ற நிலையில், வழக்கு விசாரணைக்காக வருவதை தவிர்ப்பதனை வழக்கு தொடுநர் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டி இருந்தனர்.
அதனால், மன்று கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் சத்திய கடதாசி ஊடாக மன்றுக்கு தெரிவிக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (06) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதிலும் கோட்டபாய ராஜபக்ஷ மன்றில் முன்னிலையாகவில்லை.
அதனை அடுத்து இரு தரப்பு சட்டத்தரணிகளும் எழுத்து மூல சமர்ப்பனங்களை செய்யுமாறு மன்று கட்டளையிட்டு, வழக்கினை மார்ச் மாதம் 06ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது.