கோட்டை காலி முகத்துவாரம் வர்த்தக மையத்திற்கு அருகே சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது!
Ad Space
Ad Space
வரி செலுத்தாமல் இலங்கைக்குக் கொண்டுவந்த 9,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி முகத்துவாரம் வர்த்தக மைய வளாகத்திற்கு அருகே நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு வேளையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சுற்றவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய சீன நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் கோட்டை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space