க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்!
Ad Space
Ad Space
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர், மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைகளைத் தடுப்பதற்காக பொலிஸாரினால் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான சாதாரண தரப் பரீட்சைகள் இன்று வியாழக்கிழமை (26) நிறைவடையவுள்ளன.
கடந்த காலங்களில், பரீட்சை நிறைவடைந்த கையோடு மாணவர்கள் மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் போக்கு காணப்பட்டதைக் கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக பெற்றோர்களும் தமது பிள்ளைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Ad Space
Ad Space