சசி தரூருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு
Ad Space
Ad Space
இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சசி தரூர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து இரு நாடுகளின் தற்போதைய அரசியல் மற்றும் வளர்ச்சிப் போக்குகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.
தனது இலங்கை விஜயத்தின் போதான பல சந்திப்புகளின் ஒரு அங்கமாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றதாக சசி தரூர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது பதிவில் குறிப்பிடுகையில், 'இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான முக்கிய உரையாடலில் இரு நாடுகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடினார்' எனத் தெரிவித்துள்ளார்.
Ad Space
Ad Space