விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். கொழும்பில் புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்திற்கு அருகில், கடந்த 21ஆம் திகதி, தனியார் பஸ் ஒன்று பாதசாரி மீது மோதியதில், காயமடைந்த பாதசாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலத்தை அடையாளம் காண பொலிஸாரால் புகைப்படம் ஒன்றை வெளி்யிட்டுள்ளனர். உயிரிழந்தவர் பற்றிய ஏதேனும் தகவல்கள் தெரியுமாயின், பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி இலக்கங்கள் புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071-8591555 புறக்கோட்டை பொலிஸ் நிலையம் - 0112320389