புத்தளம், கரம்ப பகுதியில் 10 நட்சத்திர ஆமைகளை சட்டவிரோதமாக தம் வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பிரிவு ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு புதன்கிழமை (16) கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டு, புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த மேலதிக விசாரணைகளில் புத்தளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக 10 நட்சத்திர ஆமைகளை வைத்திருந்த இருவர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space