கொழும்பு - பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருக்வத்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த மாட்டு இறைச்சி கடை ஒன்றை ஹோமாகம பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை (26) முற்றுகையிட்டுள்ளனர்.
அனுமதிப்பத்திரம் இன்றி மாட்டு இறைச்சி கடையை நடத்தியமை மற்றும் விலங்குகளைத் துன்புறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பாதுக்கை மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33, 34 மற்றும் 42 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டிருந்த 02 மாடுகள், கோடரி மற்றும் 02 கத்திகள், மாடுகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட லொறி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில்பாதுக்கை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மாட்டு இறைச்சி கடை முற்றுகை ; மூவர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space