சட்டவிரோத துப்பாக்கி, பாதுகாக்கப்பட்ட எறும்புண்ணியின்  உடல் பாகங்கள், மான் கொம்பு மற்றும் விலங்குகளைப் பிடிக்கும் கேபிள்களுடன் மூன்று சந்தேகநபர்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரகொடை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால்  நேற்று வியாழக்கிழமை (10) கிவுலேகட  காட்டுப்பகுதியில் குளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து சட்டவிரோதத் துப்பாக்கி, வனவிலங்கான எறும்புண்ணியின்  உடல் பாகங்கள், மான் கொம்பின் பகுதி, 3 கேபிள்கள் மற்றும் கத்தி உள்ளிட்ட பல உபகரணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூவரும் சான்றுப்பொருட்களுடன் கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.