கம்பஹா - யக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிகித்தமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, பாரியளவிலான சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யக்கல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று வியாழக்கிழமை (26) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 67 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யக்கல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் யக்கல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space