வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, சட்டவிரோத மதுபானங்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) மாலை பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரடைஸ்வத்தப் பகுதியிலும், திவுலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தூனகஹ பகுதியிலும் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
முதலாவது சோதனையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானமும், இரண்டாவது சோதனையில் 78.5 லீற்றர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தூனகஹ மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்த 45 மற்றும் 48 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space