சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக ஆன்மீகச் சொற்பொழிவும் நிதி உதவி கையளிப்பும் வெள்ளிக்கிழமை (22.05.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் ஆசிரியர் இரா.செல்வவடிவேல் கலந்து கொண்டு மகாபாரதம் எனும் தலைப்பில் தொடர் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றினார். நிகழ்வில் பதுளை ஹல்தும்முல்ல கோட்டக்கல்வி காரியாலயத்தினரின் கோரிக்கைக்கு இணங்க மேற்படி கோட்டக்கல்வி நிர்வாகத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டு நிகழ்வுகளுக்காக 50 ஆயிரம் ரூபா நிதியும், தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் கோரிக்கைக்கமையப் பாடசாலைப் பரிசளிப்பு விழாவுக்காக 25 ஆயிரம் ரூபா நிதியும் வழங்கப்பட்டது.
சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீகச் சொற்பொழிவும் நிதி உதவி கையளிப்பும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space