ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த கடல் அலை காரணமாக குறித்த இளைஞர் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த சௌமி முஹம்மது அப்லல் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞனின் திடீர் மறைவால் அந்தப் பகுதி மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
சம்பூர் கடலில் நீராடிய 19 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலி: மூதூரில் சோகம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space