சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டங்களை செயல்படுத்தும் ஏனைய பல நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றம் கண்டுள்ளதாக நாணய நிதிய பிரதிநிதிகள் குழு குறிப்பிட்டது.
இன்றைய தினம் (30) சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இந்த விடயம் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
தொடர்ச்சியான வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் நுண் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணி வருவதற்கும், அதன் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் உறுதியாக இருப்பதற்கும் தூதுக்குழு அரசாங்கத்தைப் பாராட்டியது.
பல சவால்களுக்கு மத்தியிலும், இலங்கை உறுதியுடன் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதை ஏற்றுக்கொண்ட நிதியம், நாடு தனது பொருளாதார மீட்சியை நோக்கி நகரும் போது அரசாங்கத்திற்கு தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தது.
சர்வதேச நாணய நிதிய ஆதரவுத் திட்டங்களை செயல்படுத்துவதில் சிறிலங்கா அதிக முன்னேற்றம் கண்டுள்ளது !
Ad Space
Ad Space
Ad Space
Ad Space