சாகர காரியவசம் கைது
Ad Space
Ad Space
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம், கொழும்பு - நாரஹேன்பிட்டியிலுள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று (10) திங்கட்கிழமை காலை நாரஹேன்பிட்டி குற்றப் புலனாய்வு அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அங்கு அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, அவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space