இந்திய இராணுவத்தினரால் யாழ்.சாவகச்சேரிச் சந்தையில் நடாத்தப்பட்ட கோரப் படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு நேற்றுச் செவ்வாய்க்கிழமை (27.10.2026) மாலை-05.45 மணியளவில் யாழ்.சாவகச்சேரிப் பேருந்து நிலையத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 

img_6ae22dc6b2098.jpg

இந் நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஈகைச் சுடர் ஏற்றினார்.  தொடர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் வ.சிறிபிரகாஸ் , நகர சபையின் உப தவிசாளர்,  கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.