சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைகளை முடித்துக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சத்திரசிகிச்சையின் பின்னர் ரணில் தற்பொழுது ஆரோக்கியமாக உள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையிலிருந்து வெளியேறிச் செல்ல முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்தல் வழங்கிய போதிலும் பூரணமாக குணமடையும் வரையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து அதன் பின்னர் அவர் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் ரணில்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space