சிறைச்சாலை அதிகாரி ஹெரோயினுடன் கைது!
Ad Space
Ad Space
பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்று வியாழக்கிழமை (5) ரத்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் அனைவரும் இன்று காலை கடமைக்கு செல்வதற்கு முதல் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரியிடமிருந்து 7 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் ஹக்மன - எல்லவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space