சிறைச்சாலை பேருந்து ஒன்றை தனது கைத்தொலைபேசி மூலம் இரகசியமாக காணொளி பதிவு செய்து கொண்டிருந்த பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் நின்று, தனது கைத்தொலைபேசியை மறைத்து வைத்துக்கொண்டு இரகசியமாக இந்தச் சிறைச்சாலை பேருந்தைக் காணொளி பதிவு செய்துள்ளதாக உடுகம பொலிஸார் தெரிவித்தனர்.
உடுகம பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், ஏதேனும் குற்றத்தைச் செய்யும் நோக்கத்துடன் இவர் இவ்வாறு காணொளி பதிவு செய்தாரா என்பது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபரான பெண்ணின் மகன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் உடுகம முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை பேருந்தை காணொளி பதிவு செய்த பெண்ணுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space