சிவாஜிலிங்கத்தின் சிறுநீரக அறுவைச் சிகிச்சைகளுக்குப் பெரும் நிதி வழங்கிய சட்டத்தரணி தவராசா
Ad Space
Ad Space
மூத்த தமிழ் அரசியல்வாதியும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே.சிவாஜிலிங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்றுச் சிறுநீரக அறுவைச் சிகிச்சைகளுக்காக ஏராளமானோர் அவரது வங்கிக் கணக்கிலக்கத்துக்குத் தொடர்ச்சியாகப் பணம் அனுப்பி உதவி புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தனது மனைவியான கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளை சார்பாக 10 லட்சம் ரூபாவை வெள்ளிக்கிழமை (22.05.2026) வைப்பிலிட்டு உதவியுள்ளார்.
Ad Space
Ad Space