இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனக்கும் அமரர் சிவாஜி லிங்கம் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பல்வேறு சந்திப்புகளின்போது, தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் அவர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளோம்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கும் உரிமைகளுக்கும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து, அவற்றை வென்றெடுப்பதற்காக எவ்வித சமரசமுமின்றி தனது அரசியல் பயணத்தில் உறுதியுடன் செயற்பட்ட ஒரு தலைவராக சிவாஜி லிங்கம் அவர்கள் திகழ்ந்தார்.

அன்னாரின் மறைவு தமிழ் அரசியல் பரப்பிற்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து துயரத்தில் வாடும் குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும்

மேலும், அன்னாரின் இறுதிக்கிரியைகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.