சீனாவில் புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன!
Ad Space
Ad Space
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்கள் நேற்று வியாழக்கிழமை (30) விண்ணில் ஏவப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த செயற்கைக்கோள்கள், மேம்படுத்தப்பட்ட “லொங் மார்ச் 6” (Long March-6) என்ற ரொக்கெட் மூலம் குறித்த ஏவுதளத்திலிருந்து நேற்று காலை விண்ணில் ஏவப்பட்டன.
இவை அதிவேக செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் தரவு பரிமாற்றச் சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
லொங் மார்ச் ரொக்கெட் வரலாற்றில், இது 600வது விண்வெளிப் பயணம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
Ad Space
Ad Space