இரத்தினபுரி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 273 குடும்பங்களைச் சேர்ந்த 1,103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் பெய்த கடும் மழை, வெள்ளம், சுழல் காற்று மண்சரிவு உட்பட பல்வேறு அனர்த்தங்களால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, காவத்தை, குருவிட்ட, எலபாத்த, பெல்மதுளை, கொடக்கவெல ஆகிய 06 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 36 கிராம சேவகர் பிரிவுகளில் 551 குடும்பங்களைச் சேர்ந்த 2,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் எம்.ஜே.லலித் ஆனந்த தெரிவித்துள்ளார்.
இந்த அனார்த்தங்களில் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இரத்தினபுரி சிவன் கோவிலில் 04 குடும்பங்களைச் சேர்ந்த 06 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 55 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் உறவினர்களின் வீடுகளிலும், 07 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் 02 பாதுகாப்பு மத்திய நிலையங்களிலும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனார்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
சீரற்ற வானிலை: இரத்தினபுரியில் 1,103 பேர் பாதிப்பு ; 273 குடும்பங்கள் பாதிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space